இந்த 5 ராசிகாரர்களும் சும்மா அதட்டி கூப்பிட்டாலே அழுதுவிடுவாங்களாம்! உங்க ராசி இதுல இருக்கா?

ஒருவரது குணத்தை அவரது ராசியை வைத்தே அறிந்துக்கொள்ளமுடியுமாம். ஒவ்வொரு குறிப்பிட்ட ராசியினரும் ஓரளவிற்கு ஒரே விதமான குணாதிசயம் கொண்டிருப்பார் என்று ஜோதிட அடிப்படையில் கூறலாம்.

இந்த ராசிகாரர்களால் நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாதாம்.

மேஷம்

பொதுவாக வலிமையானவர்கள். அவர்கள் பேசத் தொடங்கினால் அனல் பறக்கும். எப்போதும் சிங்கம் போல் கர்ஜித்துக் கொண்டே இருப்பார்கள். இது தான் அவர்கள் நிஜ முகம் என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். உண்மையில், அவர்கள் தங்கள் வலிமையான முகத்தை மட்டுமே பிறரிடம் காட்டுவார்கள்.

உண்மையில் யாராவது அவர்களை நிராகரித்தால் அவர்களால் தாங்க முடியாது. இந்த பயத்தை வெளிக்காட்ட முடியாமல் இப்படி மற்றவர்களை அடக்குவது போல் இருப்பார்கள். அவருக்கு நெருக்கமானவர்களால் உண்டாகும் ஒரு சிறு வலியையும் அவருடைய இதயம் தாங்கிக் கொள்ளாது. இதனால் தான் அவர்கள் காயப்படும்போது அதிகம் கோபப்படுவார்கள்.

மிதுனம்

பொதுவாக மர்ம மனிதர்கள் ஆவர். அதிகமாக பேசும் பழக்கம் கிடையாது. எல்லோரிடமும் பேசாமல் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே பேசும் சுபாவம் உள்ளவர்கள். இவை எல்லாம் மிதுன ராசியினர் பற்றி உங்களுக்குத் தெரிந்து தகவல்கள். ஆனால் உங்களுக்குத் தெரியாத ஒரு செய்தி உண்டு.

அது என்னவென்றால், அவர்கள் மனதில், கடல் போல் உணர்சிகளும், எண்ணிலடங்கா நினைவுகளும், தீவிரமான ஆலோசனையும் ஓடிக் கொண்டே இருக்கும்.

பொதுவாக மற்றவர்கள் நிராகரிப்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் அதிகமாகக் காயம் அடையும் சுபாவம் அவர்களுக்கு இருப்பதால் மட்டுமே உறவுகளுடன் இணைந்து இருக்கும் பழக்கத்தை நிறுத்தி வைத்துக் கொள்கிறார்கள்.

சிம்மம்

பொதுவாக தன்னம்பிக்கை மற்றும் பெருமையுடன் இருப்பார்கள். சிங்கம் போன்ற குணாதிசயம் கொண்டவர்கள். எந்த அளவிற்கு பெருமை உள்ளதோ, அதே அளவிற்கு நிராகரிப்பு குறித்த பயம் இருக்கும். அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருந்தாலும், மற்றவர்கள் தம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஒருவேளை அவர்கள் நிராகரிக்கபட்டால், அதிகம் காயம் அடைவார்கள். கடும் கோவக்காரர்களும் கூட.

விருச்சிகம்

எதையும் கட்டுக்குள் வைக்கும் சுபாவத்தை இயற்கையாகவே கொண்டவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் முன்கூட்டியே கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள். உறவுகளிலும், உணர்சிகளிலும் இதே நிலையை பின்பற்றுவார்கள்.

முடிந்த அளவிற்கு அவர்கள் மற்றவர்களால் எந்த ஒரு விஷயத்திற்காகவும் காயம் அடையாமல் இருக்க முயற்சிப்பார்கள். ஆனால் நிராகரிப்பு குறித்த பயம் எப்போதும் அவர்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் அவர்களைக் காயப்படுத்துவீர்கள் என்ற சந்தேகத்தில் முன்கூட்டியே உங்கள் உறவை முறித்துக் கொள்ளவும் செய்வார்கள்.

தனுசு

எல்லோரையும் நம்பி விடுவார்கள். இதனால் காயம் அடைவார்கள். இதன் மூலம் பாடம் கற்றுக் கொள்வார்கள். இந்த பாடத்தின் மூலமாக, மறுமுறை மற்றவர்களால் காயம் அடைவோமா என்ற பயம் தோன்றிவிடும். ஆனாலும் தொடர்ந்து மற்றவர்களை நம்புவதை நிறுத்த மாட்டார்கள்.

ஆனால் நம்பிக்கை மற்றும் நிராகரிப்பு குறித்த பயம் நிரந்தரமாக அவர்களிடம் தங்கி விடும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]