இந்த 5 ராசிகாரர்களிடம் மட்டும் வம்பிலுத்து மாட்டிகாதீங்க! உங்க ராசி இதுல இருக்கா?

எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையையும் திறமையாக சமாளிக்க கூடிய ராசிகாரர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம்

மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும், கடுமையான சூழ்நிலைகளை சமாளிப்பதும் இவர்களுக்கு கைவந்த கலையாகும். அவர்கள் அமைதியாகவே இருந்து தனக்குள் இருக்கும் நேர்மறை சக்திகளை தக்கவைத்து கொள்வார்கள் ஒருபோதும் தன்னுடைய எண்ணங்கள் எதிற்மறையாகப் போகாமல் கட்டுப்படுத்துவார்கள்.

மோசமான சூழ்நிலைகள் பற்றியோ அல்லது இதேபோல சூழ்நிலைகளில் மற்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்றோ சிந்தித்து இவர்கள் தங்களை குழப்பி கொள்ளமாட்டார்கள். தன்னை சுற்றியுள்ள ஆபத்தான மற்றும் எதிர்மறை சக்திகளை விரட்டி அடித்து வெற்றி பெறுவதில் மட்டுமே இவர்கள் கவனம் செலுத்துவார்கள்.

மகரம்

மகர ராசிக்கார்கள் எப்பொழுதும் அமைதியாக இருப்பதில் வல்லவர்கள் ஏனெனில் எப்பொழுதும் இவர்கள் மற்றவர்களால் உந்தப்பட மாட்டார்கள் அதேசமயம் பொறுமையாகவும் இருப்பார்கள். இவர்கள் எந்த வேலையையும் பொறுமையாக செய்வார்கள், அதன்மூலம் அவர்கள் எதிர்மறை செயல்களால் குழப்பங்கள் ஏற்படுவதை தடுப்பார்கள்.

இவர்கள் இயற்கையாகவே பிரச்சினைகளை சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள், அதுமட்டுமின்றி எந்த செயல்களால் குழப்பங்கள் ஏற்படுகிறது என்பதை நன்கு உணருவார்கள். இவர்களின் சிந்தனைகள் எப்பொழுதும் உயர்ந்ததாக இருக்கும். இவர்களின் புத்திகூர்மையால் இவர்களின் உதவியை பலரும் எதிர்பார்த்துக்கொண்டே காத்திருப்பார்கள்.

மிதுனம்

பதட்டமான சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பதில் இவர்கள் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துவார்கள். அவர்கள் எப்பொழுதும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கமாட்டார்கள்.

அதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள். இந்த கேள்விகள் பதட்டத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்துமே தவிர வேறெந்த பலனையும் அளிக்காது என்று இவர்கள் நன்கு அறிவார்கள். இவர்கள் செய்ய வேண்டிய அடுத்த வேலை பிரச்சினைகளை வெளியே தள்ள வேண்டியதாகும்.

ரிஷபம்

எப்போது அமைதியாக இருக்க வேண்டுமென்று ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் எப்போதும் வலிமையாக இருப்பதுடன் தேவையில்லாத பேச்சுகளிலும் ஈடுபடமாட்டார்கள்.

தான் பேசும் வார்த்தைகளில் எப்போதும் கவனமாக இருப்பது இவர்களின் கூடுதல் சிறப்பு. கடினமான சூழ்நிலைகளில் இருந்து வெளியே வர இவர்கள் எப்போதும் போதுமான நேரம் எடுத்து கொள்வார்கள், ஆனால் நேரம் முடிந்து இவர்கள் வெளியே வரும்போது இவர்கள் எதிரில் ஒரு பிரச்சினையும் இருக்காது. இவர்கள் எப்பொழுதும் மனஅழுத்தமும், தோல்வியும் ஏற்படாதவாறு வேலைகளை திட்டமிட்டு செய்வார்கள்.

கும்பம்

கடினமான சூழ்நிலைகளில் இருந்து கும்ப ராசிக்காரர்கள் வெளியே வர பயன்படுத்தும் வழி என்னவெனில் அந்த சூழ்நிலையில் இருந்து தன்னை துண்டித்து கொண்டு தனது எண்ணங்களை சேகரிக்க நேரம் எடுத்து கொள்வார்கள்.

கும்ப ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதில் வல்லவர்கள் எனவே கடினமான சூழ்நிலையில் மனஅழுத்தம் ஏற்படாதவாறு இவர்களால் பாதுகாத்து கொள்ளமுடியும்.

இவர்களால் ஒரு செயலை மற்றவர்களின் கோணத்தில் இருந்தும் பார்க்க இயலும், இது அவர்களுக்கு சரியான முடிவெடுக்க உதவியாக இருக்கும். இவர்கள் ஒரு சூழ்நிலையை சமாளிக்கும் விதம் எப்பொழுதும் வித்தியாசமானதாக இருக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]