இந்த 5 இறகுல ஒண்ணு சூஸ் பண்ணுங்க? வாழ்க்கை இரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க…

இது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என கூறப்படும்.

இது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வி எழலாம்! இதுப் போன்ற பல தேர்வுகள் இருக்கிறது. அவற்றில் நீங்கள் சிலவற்றை பரிசோதித்தும் பார்த்திருப்பீர்கள். வடிவம், நிறம், அளவு, தோற்றம், அழகு சார்ந்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பு, வெறுப்புகள் இருக்கும். அதை சார்ந்து அவரது குணாதிசயங்கள் அறிந்துக் கொள்ள முடியும். இந்த வகையில் தான் இதுப் போன்ற தேர்வுகளும் உருவாக்கப்படுகின்றன.

ஓகே. இனி, இந்த ஐந்து இறகுகளில் ஒன்றை தேர்வு செய்து, நீங்கள் எப்படிப்பட்டவர் என நீங்களே அறிந்துக் கொல்லுங்கள்…

இறகு #1

நீங்கள் இயல்பாகவே அமைதியான நபராக இருப்பீர்கள். உங்களை சுற்றி இருக்கும் நபர்களுடன் உங்களை எளிதாக ரிலேட் செய்துக் கொள்வீர்கள். நீங்கள் காண வலுவற்றவர் போல தெரிந்தாலும் உங்களிடம் வலிமையான வில்பவர் மற்றும் இனிமையான இதயம் இருக்கும்.

இறகு #2

எதையும் சீக்கிரம் கற்றுக் கொள்வீர்கள். வேகமாக சிந்திப்பீர்கள். புத்திசாலி, அதே சமயம் பிடிவாத குணம் இருக்கும். நீங்கள் உங்களுடன் நீங்களே அதிக நேரம் செலவழித்துக் கொள்வீர்கள். உங்கள் உணர்வுகளை மற்றவரிடம் கூறி விளக்க சிரமப்படுவீர்கள்.

இறகு #3

சுதந்திரமாக வாழ விரும்பும் நபர். தனக்கான கனவுகள், லட்சியம், எல்லைகளை வகுத்துக் கொண்டு அதை எட்டிப்பிடிக்க முயலும் நபர்கள். ஒரு நிலையில் இருந்து கீழே விழுந்தால், அதற்கு அடுத்த நிலையில் எழுந்து நிற்பீர்கள். வலிமையானவர், தைரியமானவர், உண்மையானவர். நண்பர்கள் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தலைவராக இருக்க எல்லா தகுதிகளும் இருக்கும்.

இறகு #4

தனித்துவமான நபர். உங்களை புரிந்து கொள்வதில் பெரும் சிரமம் இருக்கும். நீங்கள் சிந்தனை மற்றும் கற்பனை எல்லை கடந்ததாக இருக்கும். பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண உங்களிடம் வித்தியாசமான வழிமுறைகள் இருக்கும். மற்றவர்கள் உங்களுக்கும், உங்கள் நட்புக்கும் அதிக மதிப்பு அளிப்பார்கள். எதையும் பர்ஃபெக்டாக தேடி போகும் நபர். நீங்கள் நீங்களாகவே இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.

இறகு #5

நீங்க ஒரு கலைஞர்! கிரியேட்டிவிட்டி, கற்பனை திறன் அதிகம் இருக்கும். சில சமயங்களில் உங்கள் திறமை மீது உங்களுக்கே நம்பிக்கை இருக்காது. இதனால் நீங்கள் மேன்மை அடையாமல் இருப்பீர்கள். நீங்கள் முதலில் உங்களை எண்ணி கவலைப்படுவதை நிறுத்த வேண்டும். உங்கள் அதிகப்படியான உழைப்பு, திறனை வெளிப்படுத்தினால் காலம் வசப்படும் ஒருநாள்!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]