இந்த 5ல ஒன்னு செலக்ட் பண்ணுங்க, உங்க வாழ்க்கையில் ஏற்பட போற திடீர் திருப்பம் பத்தி நாங்க சொல்றோம்!

இது கடவுளை குறிக்கும் இலட்சினை ஆகும்.

நார்த் ஸ்டார்!

ஒருவேளை நார்த் ஸ்டார் அல்லது போல் ஸ்டார் எனப்படும் இந்த பண்டையக் கால இலட்சினையை நீங்கள் தேர்வு செய்திருந்தால்…. உங்கள் மனதில் இப்போது ஒரு பிளான் அல்லது பிராஜக்ட் இருக்க கூடும். அதை நீங்கள் உங்கள் மனதுக்குள்ளாக நீண்ட காலமாக போட்டு வைத்திருக்கும் பிராஜக்டாக இருக்க கூடும்.

அதிர்ஷ்டம்!
இந்த ஸ்டார் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய பாதையை குறிக்கிறது… அதாவது உங்களுக்கான பாதை. கொஞ்சம் கூடுதல் உழைப்பு மற்றும் முயற்சியை நீங்கள் செலுத்தினால் போதும், காலம் உங்களுடன் துணை நின்று உங்களை சரியான அதிர்ஷ்டசாலியாக மாற்றும்.

ட்ரினிட்டி (Trinity)

இது கடவுளை குறிக்கும் இலட்சினை ஆகும்.

ஒருவேளை ட்ரினிட்டியை எனப்படும் இந்த பண்டையக் கால இலட்சினையை நீங்கள் தேர்வு செய்திருந்தால்… ஆன்மீகத்தை குறிக்கும் இந்த இலட்சினையானது.. நீங்கள் ஒரு பாதையில் இருந்து வேறொரு பாதைக்கு மாற காத்திருப்பதை குறிக்கிறது.

குழப்பம்!
அதாவது, நீங்கள் நீங்கள் சமீபத்தில் எடுத்த ஒரு முடிவு சரியா, தவறா.. முன்னேறி செல்லலாமா? பின்வாங்கி விடலாமா என்று யோசித்து காத்திருப்பதை இது குறிக்கிறது. நன்கு அமைதியான மனநிலையில் தியானம் செய்து யோசித்து பாருங்கள். மனதிற்கு எது நல்லது என்று படுகிறதோ அதை தெளிவாக செய்யுங்கள்.

ஐந்துமுனை நட்சத்திரம்!

இது ஒரு மாயை மற்றும் பெண்பால் தன்மை இலட்சினை ஆகும்.

ஒருவேளை நஐந்துமுனை நட்சத்திரம் என்று அழைக்கப்படும் இந்த பண்டையக் கால இலட்சினையை தேர்வு செய்திருந்தால்… நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர். நீங்கள் தேர்வு செய்த பாதையில் நிறைய பேர் உங்களுடன் பயணிக்க காத்திருக்கிறார்கள் என்று இது கூறுகிறது.

மேஜிக்!
நீங்கள் அச்சத்தை, பயத்தை புறம்தள்ளி, நீங்கள் தேர்வு செய்த பாதையில் தாராளமாக பயணத்தை துவங்குங்கள். நீங்கள் செல்லும் பாதையில் எத்தனை மேஜிக்கிலான விஷயங்கள் நடக்கப் போகிறது என்பது உங்களுக்கே தெரியாது. அதை நீங்கள் பயணிக்கும் போது தான் உணர்வீர்கள்.

சட்டத்தின் சக்கரம்!

இது அசோகரின் சக்கரம் என்று கூறப்படுகிறது. இந்த சக்கரத்தில் இருக்கும் எட்டு கட்டைகளும், சரியான பாதையை காட்டும், சரியான வாழ்க்கையை காட்டும்.

ஒருவேளை நீங்கள் இந்த சட்டத்தின் சக்கரம் என்று அழைக்கப்படும் இலட்சினையை தேர்வு செய்திருந்தால், நீங்கள் உங்களது முழு எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளுடன் வாழ்ந்து வருவதை இது குறிக்கிறது.

வெற்றி!
இந்த பண்டைய கால இலட்சினையானது, வெற்றியை அடைய உன்னதமான சரியான பாதையில் செல்லும் போது நீங்கள் எவ்வளவு அர்பணிப்பு மற்றும்உறுதி பாடுடன் செல்ல வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறது. என்ன எதிர்பார்ப்புகள் இருப்பினும், நீங்கள் வெற்றி அடைய குறுக்கு வழியை பயன்படுத்தாமல், சரியான வழியில் சென்றால், வெற்றி உங்களுக்கே!

ஓம்!

ஓம் என்ற சொல்ல பிரபஞ்சத்தை உருவாக்கியது என்று கூறுவோர் உண்டு. இது மிகவும் மங்களகரமான குறியாகும். இது முழுமையான உருவாக்கத்தை தன்னுள் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வடிவத்தில் இதை நீங்கள் பிடித்திருன்தலோ, பின்பற்றி வந்தாலோ, அது உங்கள் வாழ்வில் செழிப்பை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

நன்றி!
ஒருவேளை ஓம் என்ற என்ற இந்த பண்டைய கால இலட்சினையை நீங்கள் தேர்வு செய்திருந்தால்… இது உங்கள் நடப்பு வாழ்வில் நீங்கள் இதுவரை பெற்றவைக்கும், எதிர் காலத்தில் பெறவிருக்கும் விஷயங்களுக்கும் நீங்கள் நன்றி செலுத்த வேண்டிய காலம் என்று கூறுகிறது. நன்றி உங்களை என்றென்றும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளும்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]