இந்த 3 ராசிகாரர்களும் தன்னை அவமானப்படுத்தியவர்களை பழிக்கு பழி வாங்குவார்களாம்! ஏனைய ராசிகாரர்கள் எப்படி?

ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் ராசியை பொருத்தே அவமானத்தை தாங்குவதா இல்லை எதிர்ப்பதா என்பதை முடிவு செய்கிறார்கள். உங்க ராசிப்படி எப்படி அவமானத்தை சமாளிப்பீர்கள் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

இவர்களின் முதல் கேள்வியே என்னை எப்படி அவமதிக்க தைரியம் வந்தது என்பது தான். அவமானத்தை கண்டாலே சீறி கொண்டு எழ ஆரம்பித்து விடுவார்கள். முடிஞ்சா அசிங்க அசிங்கமாக திட்ட கூட ஆரம்பித்து விடுவார்களாம். இதற்கு காரணம் இவர்களின் குறுகிய மனப்பான்மையே.

ஏன் சில நேரங்களில் வெறிபிடித்தவர்களாகவே மாறி விடுவார்களாம். கண்டிப்பாக இவர்கள் வெளிப்படுத்தும் சொல் ஆறாது என்றே சொல்லலாம்.

ரிஷபம்

இந்த ராசிக்காரர்கள் அவ்வளவு சீக்கிரமாக அவமானத்திற்கு தலை வணங்க மாட்டார்கள். இவர்களுக்கு அமைதி தான் முக்கியம். எனவே இவர்களை அவமானப்படுத்தி அசைக்கவே முடியாது.

வந்த இடம் தெரியாமல் அமைதியாக சென்று விடுவார்கள். வீணாக சண்டை போடுவது ஆதாயம் தராது என்று நினைப்பவர்கள். ஆனால் ஒரு வேளை இவர்கள் பழிவாங்க வேண்டும் என்று கிளம்பி விட்டால் எப்போ பழிவாங்குவார்கள் என்றே தெரியாது.

மிதுனம்

இவர்கள் பெரும்பாலும் அவமானத்தை புறம் தள்ளி விடுவார்கள். யார் முன்னாவது அவமானப் படுத்துபவரை கண்டால் அவர்களை ஒதுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவே அவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் அடியாக நினைப்பவர்கள். அதை விட்டுட்டு சும்மா அவமானத்தை பற்றியே நினைப்பது நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பது என்று நினைப்பார்கள்.

கடகம்

இவர்கள் அவமானத்தை கண்டால் சும்மா இருக்க மாட்டார்கள். தனியாக உட்கார்ந்து ஏன் இப்படி பேசினார்கள் என்று அலசி ஆராயாமல் விடமாட்டார்கள்.

இப்படி ஆராய்ந்து ஆராய்ந்து தங்கள் மனதில் மறக்காமல் வைத்துக் கொள்வார்களாம். நேரம் கிடைக்கும் போது தங்கள் மனதில் தேக்கி வைத்த கோபத்தை எல்லாம் அவமானம் செய்தவர்கள் மீது கொட்டித் தீர்த்து பழிக்கு பழி வாங்கி விடுவார்களாம்.

சிம்மம்

இவர்கள் சிரிச்சே மயக்குபவர்கள். அவமானத்தை தடுக்க சிரிப்பை ஆயுதமாக பயன்படுத்துபவர்கள். முடிஞ்ச வரை அவமானத்தை வேடிக்கையாக எடுத்துக் கொள்ள நினைப்பார்கள். அப்படியும் அது நிற்க வில்லை என்றால் பழிக்கு பழி வாங்க தயாராகி விடுவார்களாம்.

அவமானப்படுத்தியவர்களிடம் இருந்து பெரும்பாலும் இவர்கள் விலகியே இருப்பார்களாம்.

கன்னி

இவர்களும் கடக ராசிக்காரர்கள் மாதிரி தான் செயல்படுவார்கள். அவமானத்தை பெர்சனலாக எடுத்துக் கொள்வார்கள். முதலில் அலசி ஆராய்ந்து தங்களுடைய தவறு எ் ன என்று ஆராய்வார்கள். அப்புறம் அவர்கள் மேல் தப்பு இல்லை என்று தெரிந்தால் உங்களை சும்மாவே விடமாட்டார்களாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அவ்வளவு சீக்கிரமாக அவமானத்தை கண்டு கொள்ள மாட்டார்கள். இவர்களும் அதைப்பற்றி அலசி ஆராய்ந்து தங்களுடைய தவறு என்ன என்று கண்டறிவார்கள். தங்களுடைய தவறு எதுவுமே இல்லை என்றால் ஒரு வாய்ப்புக்காக காத்து இருப்பார்கள்.

அப்படி வாய்ப்பு கிடைக்க வில்லை என்றாலும் அதை மறக்க விரும்புவார்கள். இந்த முதிர்ந்த மனப்பான்மையே அவர்களால் எந்த எதிர்மறை விளைவையும் சமாளிக்கும் ஆற்றலை கொடுக்கும்.

விருச்சிகம்

இவர்களுக்கு பொதுவாக எந்த விஷயம் என்றாலும் அதை இதயத்தில் வாங்கக் கூடியவர்கள். இவர்கள் குற்றவாளியை தண்டிக்காமல் விட மாட்டார்கள்.

இவர்களுடைய புத்திசாலித்தனம் மற்றும் கூர்மையான அறிவு தங்களை அவமானப்படுத்தியவரை காயப்படுத்தாமல் விடாது.

தனுசு

இவர்கள் தங்களை அவமானப்படுத்தியவரை அவமானப்படுத்த விரும்புவார்கள். இவர்களுக்கு வாதங்கள், சண்டைகள், தவறான புரிதல் போன்றவை பிடிக்காது. எனவே அவமானத்தை நேர்மறையாக எடுத்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.

மகரம்

வேண்டாத விஷயங்களைப் பற்றி கவலைப்பட இவர்களுக்கு பிடிக்காது. அவர்களுக்கு எப்பொழுதும் தொழில் தொழில் மட்டுமே.

எனவே அவமானத்தை கண்டு கொள்ளாமல் வெளியேற நினைப்பார்கள். பிடிக்க வில்லை என்றால் அவர்களுடன் எந்த தொழிலும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

கும்பம்

இவர்கள் அவமானத்தை புறக்கணிக்க விரும்பமாட்டார்கள். அவமானப்படுத்தியவரை முக்கியமான நபர்களின் பட்டியலில் இருந்து நீக்கி விடுவார்கள். அவர்களுடனான உறவை துண்டித்துக் கொள்வார்கள். அவர்களின் உறவை அறவே வெறுப்பதே இவர்களுக்கு பிடிக்குமாம்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் அவமானத்தை பெர்சனல் விஷயமாக எடுத்துக் கொள்வார்கள். அதை தவிர்க்க முற்பட்டாலும் சில நேரங்களில் தோல்வியை தழுவுவார்கள்.

இந்த அவமதிப்பு உணர்வுகளை எல்லாம் ஓரம் தள்ளி விட்டு வெற்றியை நோக்கி போக ஆரம்பித்து விடுவார்கள். எனவே அவமதிப்பு என்பது இவர்களுக்கு விலைமதிப்பே.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]