இந்த 2019 இல் உங்கள் ராசிக்கு இந்த நிறம் தான் அதிர்ஷ்டமாம்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் பிடிக்கும். அதே போல ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்ட நிறங்கள் உள்ளன.

அப்படி இந்த 2019 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ராசிக்கும் எந்த நிறம் அதிர்ஷ்டத்தை தரும் என பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் உங்களுக்கு பிங்க் நிறம் அதிர்ஷ்ட நிறமாக அமைகிறது. இந்த பிங்க் நிறம் உலகளாவிய காதலை குறிக்கிறது. பிங்க்கைத் தவிர நீங்கள் சிவப்பு நிறத்தை கூட பயன்படுத்தலாம். இது உங்களுக்கு ஆற்றலையும் தூய்மையும் தருகிறது. ப்ரவுன் மற்றும் கருப்பு போன்ற அடர்ந்த நிறங்களை இந்த ஆண்டு தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

சுக்ரனால் ஆளப்படும் உங்களுக்கு பச்சை நிறம் சிறப்பாக அமையும். எமரால்டு பச்சையால் வருகின்ற ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டமான ஒன்றாக அமையும். இந்த நிறத்தில் ஆடை அணிந்து செல்வது உங்களுக்கு நேர்மறை பலன்களை கொடுக்கும். மஞ்சள் நிறத்தை தவிர்த்து விடுங்கள். இது உங்களுக்கு எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்.

மிதுனம்

புதனால் ஆளப்படும் உங்களுக்கு நீலநிறம் வருகின்ற ஆண்டு சிறப்பாக இருக்க உதவுகிறது. நீலநிறம், சையான் போன்ற நிறங்கள் மன அமைதியை கொடுக்க வல்லது. எனவே மேற்கண்ட நிற ஆடைகளை அணிந்து மன அழுத்தத்தை குறைத்து உங்களை சுற்றி சந்தோஷத்தை நிலைத்திருக்க செய்யுங்கள்.

கடகம்

சந்திரனை அடையாளமாக கொண்ட இந்த ராசிக்காரர்களுக்கு சிவப்பு அதிர்ஷ்ட நிறமாக அமைகிறது. ஆசையால் உந்தப்பட்ட உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வரவழைத்து நேர்மறை பலன்களை தர இது உதவுகிறது. உங்கள் அன்பான வாழ்க்கைக்கு இந்த அதிர்ஷ்ட நிறம் கைகொடுக்கும். பச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற நிறங்களை தவிர்ப்பது நல்லது. இது உங்களுக்கு வரவிருக்கும் அதிர்ஷ்டத்தை தள்ளிப் போக செய்து விடும்.

சிம்மம்

சூரியனின் ஆதிக்கத்தை பெற்ற உங்களுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்டத்தை தரக் கூடிய நிறம் மஞ்சளாகும். இதைத் தவிர கோல்டன் கலர், சிவப்பு மற்றும் பச்சை போன்றவைகளும் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். எனவே சூரியனைப் போன்றே சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து இந்த ஆண்டும் ஜொலியுங்கள். மஞ்சள் அல்லது கோல்டன் கலர் நீங்கள் இழந்த நம்பிக்கையை திரும்பப் பெற்று தரும்.

கன்னி

பூமியால் ஆளப்படும் உங்களுக்கு இந்த ஆண்டு ஊதா நிறம் அதிர்ஷ்ட நிறமாக அமைகிறது. ஊதா நிறம், வொயின் சிவப்பு, மெஜந்தா போன்ற நிறங்கள் உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமாக அமைகிறது. இந்த நிறங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல நம்பிக்கையைத் தருகிறது. கருப்பு மற்றும் பச்சையை தவிருங்கள்.

துலாம்

சுக்ரனின் ஆதிக்கத்தை பெற்ற துலாம் ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டத்தை தரக் கூடிய நிறம் நீல நிறம்.அதே மாதிரி கடற்பச்சை, பிங்க் மற்றும் மெரூன் போன்றவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். இந்த நிறங்களில் ஆடைகளை அணிந்து செல்லும் போது வேலை நினைத்த படியே நடக்கும். பணியிடங்களிலும் நிறைய நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் அணிவதை தவிருங்கள்.

விருச்சிகம்

செவ்வாய் ஆதிக்கத்தை பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வருடம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் கருப்பு நிறமாகும். இது உங்களுடைய வலிமை, தீவிரம் மற்றும் சக்தி போன்றவற்றை குறிக்கிறது. பச்சை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்கள் வேண்டாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லா வகை பச்சை நிறங்களும் அதிர்ஷ்டத்தை அளிக்க கூடியது. அதே மாதிரி சிவப்பு நிறம் கூட உங்கள் காதல் வாழ்க்கைக்கு மிகவும் சிறந்தது. நீல நிறம் மற்றும் மஞ்சள் நிறங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம்

மகரம் சனியின் ஆதிக்கத்தால் ஆளப்படுகிறது. நீல நிறம் மற்றும் கடற்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறங்களாகும். அதே நேரத்தில் நீங்களும் உங்கள் துணையும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து சென்றால் நல்ல பலன் கிடைக்கும். சிவப்பு மற்றும் பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்காத நிறங்கள்.

கும்பம்

சனியின் ஆதிக்கத்தை பெற்ற கும்ப ராசி அன்பர்களே, உங்களுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு ஆகும். கடல்நீலம் உங்களுக்கு பல நன்மைகளை கொடுக்கும். சிவப்பு நிறத்தை அணிவதை தவிருங்கள்

மீனம்

வியாழனின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் இந்த மீன ராசிக்காரர்கள். மஞ்சள் மற்றும் பச்சை மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்க வல்லது. லேசான பச்சை உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை வளர்ச்சிக்கு உதவும். பழுப்பு மற்றும் ப்ரவுன் கலர் எதிர்மறை விளைவை கொடுக்க வல்லது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]