இந்த வருடத்தில் முதல் 5 மாதங்களில் 150 பேர் வரை பலி

நாட்டில் இந்த வருடத்தில் முதல் 5 மாதங்களில் மாத்திரம் டெங்கு தொற்று காரணமாக, 150 பேர் வரையில் மரணித்துள்ளதாக, சுகாதார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த 6 மாதங்களில் மாத்திரம் 59 ஆயிரத்து 760 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதில் 43 சதவீதம் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என, சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.