இந்த ராசியில் பிறந்தவர்கள் கவனக்குறைவால் அவஸ்தைபடுவார்களாம்!

மேஷம்

புத்திகூர்மை அதிகமிக்க இவர்கள் தனக்கு என்ன வேண்டும் தாங்கள் எங்கே செல்கிறோம் என்பதை நன்கு அறிவார்கள். ஆனாலும் அவர்கள் எப்பொழுதும் போகிற வழியில் இருக்கும் அனைத்தையும் மறந்து விடுவார்கள். இவர்கள் மற்றவர்களுக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் ஆனால் அதற்கான பொருள் நம்மிடம் இருக்கிறதா என்பதை மறந்து விடுவார்கள்.

ஏனெனில் அவர்கள் செயலில் மட்டுமே கவனம் செலுத்துவார்களே தவிர அதற்கான பொருளை பற்றி மறந்துவிடுவார்கள். அவர்கள் இலட்சியத்தை அடையலாம் ஆனால் அதற்காக மற்றவற்றை மறந்து விடுவார்கள்.

ரிஷபம்

இவர்களின் கவனக்குறைவு எப்பொழுதும் இவர்களை விட மற்றவர்களை அதிக பாதிக்கும். எந்த வேலைக்காக வந்தோம் என்பதே மறக்கும் அளவிற்கு இவர்களின் கவனக்குறைவு இருக்கும். எவ்வளவு முக்கியமான வேலைக்காக வந்திருந்தாலும் அவர்கள் அதன் மேல் அக்கறையின்றி அடுத்த வேலையை நோக்கி சென்றுவிடுவார்கள். கவனக்குறைவுடன் சேர்த்து இவர்களுக்கு அக்கறையின்மையும் இருக்கும்.

விருச்சிகம்

சிம்ம ராசிக்காரர்களை போலவே விருச்சிக ராசிக்காரர்களும் அதிக குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள், இவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் எப்பொழுதும் கவனம் செலுத்தமாட்டார்கள். இவர்கள் தங்கள் வார்த்தைகளில் நம்ப முடியாத அளவிற்கு கவனக்குறைவாக இருப்பார்கள், இவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் நேரத்தை வீணடிப்பதாகவும், உறவுகளை துண்டிப்பதாகவும், மற்றவர்களை காயப்படுத்துவதாகவும் இருக்கும்.

மேலும் அவர்களின் முட்டாள் தனத்தையும், வெறுப்பேற்றும் குணத்தையும் பொறுத்து கொள்ளும் குணம் இருந்தால் மட்டுமே விருச்சிக ராசிக்கார்களுடன் பழகலாம்.

தனுசு

தாங்கள் எந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருந்தோம் அதனால் என்ன பிரச்சினைகள் ஏற்பட்டது, அதனால் யார் பாதிக்கப்பட்டார்கள் என்று இவர்கள் உணர அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். இவர்கள் தங்களை பற்றி மற்றவர்கள் பெருமையாக பேச அவர்கள் திகைப்பூட்டும் செயல்களையோ, எவ்வளவு வேடிக்கையான செயல்களையோ செய்ய தயங்கமாட்டார்கள்.

இவர்களின் செயல்களை எப்பொழுதும் மற்றவர்கள் ரசிக்கமாட்டார்கள். மற்றவர்கள் தர்மசங்கடமாக உணரச்செய்வதில் இவர்களுக்கு இணை யாருமில்லை. அவர்கள் எவ்வளவு கவனக்குறைவாக இருந்தோம் என்பதை உணரும்போது மிகவும் வருத்தப்படுவார்கள்.

சிம்மம்

கோவம் வந்தால் ஆக்ரோஷமாக இருக்கும் இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் கவனம் தன்னை நோக்கியே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள், இவர்களின் நுழைவு எப்பொழுதும் மற்றவர்களை விட பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்கள் மிகவும் குழப்பம் மிகுந்த ராசிக்காரர்கள், தாங்கள் எதை நோக்கி போகிறோம், எங்கு செல்கிறோம் என்பதை பற்றி கூட இவர்கள் அக்கறை செலுத்தமாட்டார்கள்.

இவர்கள் மற்றவர்களை பற்றி எப்பொழுதும் கவனம் கொள்வார்கள் ஆனால் தங்களை பற்றி வரும்போது இவர்கள் எப்பொழுதும் அக்கறையாக நடந்து கொள்ளமாட்டார்கள்.

மீனம்

உணர்ச்சிகள் நிறைந்த மீன ராசிக்காரர்கள் தங்களை பற்றி தாங்களே அதிகம் பாவமாக எண்ணிக்கொள்வார்கள், இதனால் அவர்கள் மற்றவர்களின் அதிக கவனத்தை எதிர்பார்ப்பார்கள். இது அவர்களுக்குள் இருக்கும் கவனக்குறைவை அதிகரிக்கும். மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் மூர்க்கத்தனமாக தங்களுக்காக ஒருவர் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களை தங்களுக்கு வேண்டியது போல நடத்த இவர்கள் செய்யும் நயவஞ்சக செயல்கள் வெளியே தெரிந்து விட்டால் கூட அதை நினைத்து கவலை கொள்ளமாட்டார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]