முகப்பு Horoscope இந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி அமைவாங்களாம்? உங்களுக்கு எப்படி அமையும் என்று பாருங்க பாஸ்

இந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி அமைவாங்களாம்? உங்களுக்கு எப்படி அமையும் என்று பாருங்க பாஸ்

ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சுபர், குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் போன்றவர்கள் அமர்தல், பாவர்கள் பார்க்காமல் இருத்தல் போன்றவை இருந்தால், அவர்களுக்கு அழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ளதாம்…

ரிஷபம் மற்றும் துலாம்:ரிஷபம் மற்றும் துலாம் ராசிக் காரர்கள் அனுபவிக்க பிறந்தவர்கள். தனது வாழ்க்கையில் உணவாக இருந்தாலும் கூட நல்ல ருசியாக இருக்க வேண்டும், சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இராசிக் காரர்கள்.ரிஷப ராசிக் காரர்கள் மிகவும் உஷாராக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு அழகான மனைவி/கணவன் கிடைப்பது நிச்சயம்.

தனுசு மற்றும் கடகம்:தனுசு, கடகம் ராசிக் காரர்கள் ஆண், பெண் விஷயத்தில் பெரிய ஆய்வாளர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் ஒருவரின் புன்னகை, பேச்சு, கண்கள், மூக்கு என்று ஒவ்வொரு பாகத்தையும் ரசித்து காதலித்து திருமணம் செய்பவர்களாக இருப்பார்கள்.

மகரம், கும்பம், சிம்மம், மேஷம் மற்றும் விருச்சிகம்:மகரம், கும்பம், சிம்மம், மேஷம், விருச்சிகம் போன்ற ராசிக் காரர்கள் எல்லாம் இஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று கூறுவதை விட மிகவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று ஜோதிடம் சொல்கிறது

ஆனால் இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுபர் லக்னம் ஏழாமிடத்தில் இருந்தால் இவர்களுக்கும் அழகான வாழ்க்கை துணை அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது.

கன்னி, மிதுனம் மற்றும் மீனம்:கன்னி, மீனம் மற்றும் மிதுனம் ராசிகாரர்கள் கணக்குப் போட்டுப் பார்த்து செயலில் இறங்குபவர்கள். இவர்கள் தங்களுக்கான துணையை தேர்வு செய்வதிலும் கூட தெளிவாக இருப்பார்கள்.

இந்த ராசிக்காரர்கள் அனைவருமே ஒருவரது குணாதிசயங்கள், அவரது குடும்பம், என்று அனைவரை பற்றியும் தெரிந்துக் கொண்டு தான் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்வார்கள்.

மேலும் இவர்களுக்கு அழகு என்பது இரண்டாம் பட்சம் தான். அறிவும், திறமையும் தான் இவர்கள் எதிர்பார்ப்பது.

மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான குறிப்புகள் தான். ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் வலுத்தவர், 7 ஆம் இடத்தை சுபர் பார்வை செய்பவர், சுக்கிரன், குரு வலிமையான நிலையில் இருந்தால், அவர்களுக்கு அழகான கணவன், மனைவி அமைவது நிச்சயம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com