இந்த ராசிகாரர்கள் பக்கதுல இருந்தா கவனம்! அடுத்தவங்க மீது பழிபோடுறதுல இவங்கள அடிச்சிக ஆளே இல்லையாம்!

இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் அடுத்தவர் மீது பழிபோடுவார்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம்

இவர்கள் தனக்கு தேவையான காரியம் முடிந்தவுடன் விலகி கொள்வதில் விவரமானவர்களாக இருப்பார்கள். வெற்றிகள் வரும்போது அது தன்னால்தான் வந்தது என்றும் தோல்விகள் வரும்போது அது மற்றவர்களால் தான் வந்தது என்றும் கூறிக்கொள்வார்கள்.

இவர்கள் தங்களின் செயல்களுக்கு ஒருபோதும் பொறுப்பேற்று கொள்ள மாட்டார்கள், ஆனால் மற்றவர்கள் மீது பழிசுமத்த இவர்கள் எப்போதும் தயாராய் இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு பிரச்சினைகள் மட்டுமே வந்துசேரும்.

கடகம்

மற்றவர்கள் மீது பழிசுமத்துதல் என்று வரும்போது நீங்கள் நிச்சயம் உங்களுடைய தவறை ஒப்புக்கொள்ள மாட்டிர்கள். உங்களை நிரூபிக்க ஒன்று கிடைத்து விட்டால் நீங்கள் அதனை வைத்தே உங்கள் மீது எந்த தப்பும் இல்லை என்று பேசியே சாதித்து விடுவீர்கள்.

இது உங்களை சிறந்தவர்களாக காட்டலாம் ஆனால் உண்மையில் நீங்கள் விளைவுகளை எதிர்கொள்ள அஞ்சும் ஒரு கோழையாவீர்கள். உங்களுக்கு தவறானசெயல்கள் பிடிக்காது, ஒருவேளை உங்களால் ஏதாவது தவறு நேர்ந்தால் நீங்கள் மற்றவர்கள் மீது பழிசுமத்திவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பிவிடுவீர்கள்.

கன்னி

உங்களை பொறுத்தவரை நீங்கள் நீங்கள் அனைத்திலும் சரியானவர்களாக இருக்கிறீர்கள், நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கும்.

எனவே நீங்கள் திட்டமிட்டபடி எதுவும் உங்கள் வாழ்க்கையில் நடக்கவில்லை என்றால் அதற்கு காரணம் மற்றவர்களின் தவறுதான் என்று நினைப்பீர்கள். உங்களுக்கு நீங்கள் எப்பொழுதுமே உயர்ந்தவர்கள்தான் அதனால உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளுக்கு நீங்கள் ஒருபோதும் பொறுப்பேற்று கொள்ளமாட்டிர்கள். மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதிலேதான் உங்கள் கவனம் முழுவதும் இருக்கும்.

துலாம்

தான் அனைத்து தருணங்களிலும் சரியானவராகவே இருக்கிறேன் என்று நினைக்கும் ராசிகளில் நீங்களும் ஒருவர். மற்றவர்களுடன் ஒன்றாக சேர்ந்து சிரித்தாலும் நீங்கள் பெரும்பாலும் தனிமையில்தான் இருப்பீர்கள்.

சகமனிதர்கள் மீதான உங்களின் வெறுப்பு வலுவாக இருக்கும், இதனால் மற்றவர்கள் மீது பழிபோடுவது என்பது உங்களுக்கு மிகவும் எளிதான ஒன்றாகும். நீங்கள் மற்றவைகளை விட உங்களை எப்போதும் நல்லவராக நினைப்பீர்கள் அதனால் உங்களின் செயல்களுக்கு பொறுப்பேற்று கொள்ள நீங்கள் எப்போதும் தயாராக இருக்க மாட்டிர்கள். உங்களை நினைத்து நீங்கள் எப்போதும் குற்றவுணர்வு கொள்ளவே மாட்டிர்கள்.

மகரம்

நீங்கள் மற்றவர்களை புண்படுத்திவிட்டிர்கள் என்பதை கேட்க உங்களுக்கு விருப்பம் இருக்காது. ஆனால் நீங்கள் ஒருவேளை அப்படி செய்துவிட்டால் உடனடியாக அது உங்கள் தவறில்லை என்றார் வாதிடுவீர்கள்.

நீங்கள் எப்பொழுதும் அமைதியாக இருப்பீர்கள், அதுதான் உங்களை அடுத்தவர் மீது பழிசுமத்த உதவியாக இருக்கும். நீங்கள் விளைவுகளை பற்றி ஒருபோதும் கவலைப்பட மாட்டிர்கள். உங்களின் நோக்கம் எல்லாம் மற்றவர்களின் மீது பழியை சுமத்தி விட்டு நீங்கள் பிரச்சினைக்ளைல் இருந்து ஒதுங்கி கொள்வதுதான்.

கும்பம்

உங்களின் சில செயல்கள் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போதுமே இருக்காது. எனவே உங்கள் மீது மற்றவர்கள் மீது கோபப்படும்போது அது முழுக்க முழுக்க மற்றவர்களின் தவறுதான் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும்.

அனைவரின் மீதும் நீங்கள் குற்றம் கண்டுபிடிப்பீர்கள், ஆனால் மற்றவர்கள் உங்கள் மீது குற்றம் கூறும்போது அதனை கருத்தில் கூட கொள்ளமாட்டிர்கள். உங்கள் வாழ்க்கையில்ஏற்படும் துன்பங்கள் அனைத்திற்கும் எப்பொழுதும் மற்றவர்கள் மீதே பழிபோடுவீர்கள். அதற்கு காரணம் நீங்கள்தான் என்பதை உணரவும் மாட்டிர்கள், ஒப்புக்கொள்ளவும் மாட்டிர்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]