இந்த ராசிகள் தான் சக்தி வாய்ந்தவையாம்! உங்க ராசி இதுல இருக்கா?

12 ராசிகள் இருந்தாலும் இந்த 5 ராசிகள் மட்டுமே இயல்பாகவே சக்தி வாய்ந்தவையாம். இதில் உங்கள் ராசி இருக்கா?

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்கள். இவர் எந்த உயரத்தையும் எட்டிப்பிடிக்கும் குணம் கொண்டிருப்பார்கள். இதனால், கூடுதல் உயரம் அடையும் வாய்ப்புகள் உள்ளது.

இவர்கள் கொஞ்சம் அடம்பிடிக்கும் ஆட்களாகவும் இருப்பார்கள். இந்த ஒரு குறையை இவர்கள் நிவர்த்தி செய்துக் கொண்டால் இவர்கள் வாழ்வின் உயரத்தில் வர வாய்ப்புள்ளது.

கடகம்

கடகம் ராசி உள்ளவர்கள் மிகவும் வாய்ந்தவர்கள். இவர்களின் அன்பும், அக்கறையும் இவர்களது கூடுதல் பலமாக இருக்கும். ஒரு சிறிய விடயங்களை தங்கள் பாதையில் தாக்கம் ஏற்படுத்த விட மாட்டார்கள்.

இவர்களது உறுதியான குணம் எதையும் வென்று காட்ட காரணியாக இருக்கும். இதில் இவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

தன்னை தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் பண்பு கொண்டுள்ள இவர்கள் தங்களால் எதெல்லாம் சாதிக்க முடியும் என்றும் அறிந்து வைத்திருப்பார்கள்.

சிம்மம்

சிம்மம் ஆதிக்கம் நிறைந்த ராசி. இந்த ராசிக்காரர்கள் பிறப்பிலேயே ஆதிக்கம் கொண்டதாக இருப்பார்கள். ஊக்கசக்தி கொண்ட இவர்கள், ஒவ்வொரு முறையும் அவர்களது வேலைகளை கச்சிதமாக முடிக்காமல் ஓய மாட்டார்கள்.

இவர்கள் யாராக இருந்தாலும் தங்கள் பேசும் திறனால் அவர்களது பார்வையை மாற்றி விடுவார்கள். ஆனால் இவர்களின் ஒரே குறை கோபம் மட்டுமே.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பாகவே தீவிரமாக செயல்படுவார்கள். இந்த குணத்தால் தங்கள் கனவை நினைவாக்க கடுமையாக உழைப்பார்கள்.

இவர்கள் எப்போதும் அன்பின் வழியில் நடப்பார்கள். எதையும் கலந்தாய்வு செய்து, ஆராய்ந்து கணக்கிடுவதில் மிகவும் வல்லவராக திகழ்வார்கள்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு அறிவாற்றல் அதிகமாக இருக்கும். அதனால் இவர்கள் வலிமையாக திகழ்வார்கள். இவர்கள் எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதற்கான தீர்வை கண்டறிந்து வருவதில் சிறப்பாக செயல்படுவார்கள்.

அதுவும் இவர்கள் அசௌகரியமான சூழலில் இருந்து தங்களை தாங்களே வெளிக் கொண்டு வருவதில் மிகவும் சிறந்தவராக திகழ்வார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]