இந்த நாடுகளில் இதை எல்லாம் செய்யக்கூடாதாம்! சில விசித்திர சட்டங்கள்!

நாட்டிற்கு நாடு விதிமுறைகளும் சட்டங்களும் வித்தியாசப்படும். இங்கு சில நாடுகளில் இருக்கும் வித்தியாசமான உணவு தொடர்பான சட்டங்கள் தொடர்பில் பார்க்கலாம்.

நியூஜெர்சியில் உணவகங்களில் சூப்பை உறிஞ்சிக்குடிப்பது அவர்களின் சட்டப்படி குற்றமாம்.

தாய்லாந்தில், சுவிங்கம் சாப்பிட்டு அதை பொது இடங்களில் துப்பினால் 600 டாலர் அபராதம்.

அமெரிக்கா- கலிபோர்னியாவில் உள்ள பூங்காக்கள் மற்றும் பொழுது போக்கு இடங்களில் பறவைகளுக்கு உணவு கொடுக்க கூடாது, அப்படி கொடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

பொலீவியாவில்  திருமணமான பெண்கள் ஒரு கிளாசிற்கு மேல் மது அருந்தக் கூடாது.

டென்மார்க்கில் உள்ள உணவகத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு நமக்கு திருப்திகரமானதாக இல்லை என்றால் அவர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை. டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் வருபவர்களுக்காகவே இந்த பிரத்யேகமான சட்டத்தை வைத்துள்ளார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]