இந்த நடிகைதான் என் படத்தில் நடிக்க வேண்டும் என அடம்பிடித்த நடிகர்

இந்த நடிகைதான் என் படத்தில் நடிக்க வேண்டும் என அடம்பிடித்த நடிகர்

அடம்பிடித்த நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் அந்த நடிகர் போலீஸ் வேடத்தில் நடித்த படம் சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. சினிமா துறை மற்றும் அனைவரிடமும் பாராட்டுக்களை வாங்கிய அந்த படத்தில் திரைக்கதையே படத்தின் வெற்றிக்குக் காரணம் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

முக்கியமாக அப்படத்தில் கிளாமர் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. அவ்கிளாமர் காட்சிகள்தான் படத்தின் வேகத்தைக் குறைக்கிறது என பரவலாகப் பேசப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குநரிடம் வேறொரு இயக்குநர் கேட்ட போது அதுகுறித்து அவர் மனம் திறந்து பேசியிருக்காராம்.

அக்காட்சிகளை அந்நடிகரின் வற்புறுத்தலாலேயே படத்தில் அநாவசியமான கிளாமர் காட்சிகள் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார், மற்றும் அம்முன்னணி நடிகர் கூறினாராம் முன்னணி நடிகர்களின் படங்களில் கிளாமர் இருக்க வேண்டும் என்று. அதுமட்டுமின்றி அந்த படத்தில் அந்த நடிகையைத் தான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று நடிகர் அடம்பிடித்தாராம். அதனாலேயே அந்த நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் இயக்குநர் கூறியிருப்பதாக கோடம்பாக்கத்திலிருந்து கிசுகிசு கசிந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]