இந்த நடிகர்களிடம் கருப்பு பணமே இல்லை- சீமான் அதிரடி

இயக்குனர் சீமான் தற்போது தீவிர அரசியலில் தன் கவனத்தை செலுத்தி வருகின்றார். அதிலும் குறிப்பாக தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும் என்பதில் மிகவும் குறிக்கோளாக பேசி வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் அரசியல் வருவது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது, இதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.

மேலும், ரஜினிகாந்த் சரியாக வரி கட்டுகிறாரா?, அதை அவர் காட்ட தைரியம் உண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது மட்டுமின்றி தனக்கு தெரிந்து திரையுலகில் கமல், மாதவனிடம் மட்டுமே கருப்பு பணம் என்பதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.