இந்த நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு காஜல் அகர்வாலுக்கு கிடைக்குமா?

பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.

பத்து வருடங்களில் 50 படங்களுக்கு மேல் நடித்து விட்ட காஜல், அடுத்ததாக ஜெயம் ரவியின் படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘போகன்’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்க விருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாததால் அவருக்குப் பதிலாக ஹன்சிகா நடித்தார்.

தற்போது புதிய படம் மூலம் ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால் இணையவிருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும் ஜெயம் ரவி அடுத்து தன்னுடைய அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நடிகருடன்

இந்த நடிகருடன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]