இந்த நடிகருக்கு தான் ஐ லவ் யூ சொல்வாராம் வரலக்ஷ்மி!

சர்கார், சண்டக்கோழி 2 படங்களில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நெகடிவ் வேடங்களில் நடித்திருந்தார். இவரின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இவர் நடிகர் விஷாலை காதலித்து வருவதாக நீண்ட நாளாக வதந்திகள் பரவி வந்தது. ஆனால் அண்மையில் விஷால் தன் திருமணம் பற்றி அறிவித்த பின்னர் வதந்திகள் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற வரலக்ஷ்மி சரத்குமார் தனக்கு தெலுங்கு நடிகர் பிரபாஸ் மிது கிரஷ் இருப்பதாக கூறியுள்ளார்.

ஐ லவ் யூ சொல்வதென்றால் பாகுபலி பிரபாஸிடம் தான் சொல்வேன் என கூறியுள்ளார் வரலக்ஷ்மி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]