இந்த ஒரு விஷயத்தில் தான் விஜய் சார்க்கு வெற்றி

இந்த ஒரு விஷயத்தில் தான் விஜய் சார்க்கு வெற்றி

விஜய் சார்க்கு

சினிமாவில் சிக்கல்களை தாண்டி மேலே வருவது மிகவும் கடினம். அதே மாதிரி பிரச்சனைகளை சமாளிப்பதே பெரும் தலைவலி.

பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகர்களோ, நடிகைகளோ பிரபலங்களுடன் நடிக்க ஆசையிருக்கிறது என சொல்வார்கள். ஆனால் இங்கு ஒருவர் வித்தியாசமாக தன் மனம் திறந்து பதிலளித்துள்ளார்.

அவர் வேறு யாருமல்ல. பள்ளிப்பருவத்திலே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் நந்தன். 90 களின் பிரபல இசையமைப்பாளரான சிற்பியின் மகன். இவர் ஒரு நேர்காணலில் சொன்ன விசயங்கள் தான் இனி.

பிரபலத்தில் மகன், சினிமா வாரிசு என்பதெல்லாம் இப்போது நடிப்பதற்கான தகுதி கிடையாது என கூறும் அவர் நமக்கு அருகில் இருப்பவர்கள் கூட நமக்கு ரோல் மாடலாக இருப்பார்கள்.

சினிமாவில் விஜய் சார் என்றால் ரொம்ப பிடிக்கும். பல விமர்சனங்கள் சந்தித்து வருகிறார். சினிமாவையும் தாண்டி அவருக்கு வேறு விதமான பக்கம் இருக்கிறது.

பல கலைஞர்கள் மத்தியில் விநோதமான வாழ்கையை கடந்து பொறுமையாக, எளிமையாக ஜெயித்து வருகிறார். என்னை போன்று வளர்ந்து வருகிற ஒவ்வொருவருக்கும் அவர் ஒரு முன் உதாரணம் என்கிறார் நந்தன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]