இந்த அரசாங்கம் தோனிமேல் செல்கிறது

அரசாங்கம்

“எந்த அரசாங்கம் வந்தாலும் நாம் தோட்டங்களை விட்டுக்கொடுக்க முடியாது. தோணி மேல் செல்லும் இந்த அரசாங்கம் நீண்ட காலத்திற்கு செல்லாது” என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டத் கமிட்டி தலைவர், தலைவிமார்களுக்கிடையில், ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தோட்டங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று நாம் அன்றே சொன்னோம். சிறு அபிவிருத்திகளை செய்துக் கொடுத்தால் மலையகம் அபிவிருத்தி அடையாது. எமது சமூகத்தில் நாம் அபிவிருத்தியை காண வேண்டுமென்றால் காணிக்கு சொந்தகாரனாக வேண்டும்.

கடந்த காலங்களில் எற்படுத்திய மாற்றத்தை மறுபக்கம் திருப்பி போட்டால் தான் எதிர்காலத்தில் நாம் மானத்துடனும் மரியாதையுடன் வாழ முடியும். காங்கிரஸ் வாங்கிக் கொடுத்த வாக்குரிமைகளை பெற்றுக் கொண்டு காங்கிரஸையே இன்று விமர்சிக்கின்றனர்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]