இந்த அரசாங்கம் தொடர்பில் நான் பெருமையடைகிறேன் – முன்னாள் ஜனாதிபதி

அதிகமான கடன்தொகை இருந்தும் கடந்த மூன்று வருடங்களுக்குள் இந்த அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தான் பெருமையடைவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை மத்திய வங்கியின் பினைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை அரசியல் தேவைக்காக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை மித்தெனிய பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவாறு தெரிவித்துள்ளார்.