இந்தோனேஷிய நிலநடுக்கம் – சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியது

இந்தோனேஷிய நிலநடுக்கம் – சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியது

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தோனேஷிய பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இதுவரை 1203 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் பின்னர் ஏற்பட்ட சுனாமி இந்தோனேஷியாவின் பல பகுதிகளைத் தாக்கின. குறிப்பாக சுலாவேசி தீவிவில் சுமார் 19 அடி உயரத்திற்கு ஆவேசமாக எழுந்த அலைகள் அங்கு பலத்தை சேதத்தை ஏற்படுத்தியது.

பலு மற்றும் டோங்காலா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், பலு கடலோர பகுதியில் இடிபாடுகளில் 821 சடலங்களும், டோங்கலாவில் 11 சடலங்களும் மீட்கப்பட்டதை அடுத்து உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்திருந்தது. இதில் உயிரிழந்தவர்களில் 61 பேர் வெளிநாட்டவர் என தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தோனேஷிய நிலநடுக்கம் இந்தோனேஷிய நிலநடுக்கம் இந்தோனேஷிய நிலநடுக்கம் இந்தோனேஷிய நிலநடுக்கம் இந்தோனேஷிய நிலநடுக்கம் இந்தோனேஷிய நிலநடுக்கம் இந்தோனேஷிய நிலநடுக்கம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]