இந்தோனேஷியா சுனாமியால் 100ற்கும் மேற்பட்டோர் பலி! இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தை மீட்பு!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 168-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 750 பேர் காயமடைந்துள்ளதோடு 30 பேரை காணவில்லை. இந்நிலையில் சுனாமி காரணமாக இடுபாடுக்குள் சிக்கிய குழந்தை ஒன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தோனேஷியா சுனாமியால்

இப்படம் Banten பகுதியில் இருக்கும் Mutiara ஹோட்டல் பகுதியில் எடுக்கப்பட்டது என்று அந்நாட்டு பத்திரிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. சுனாமியால் 10 க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

இந்தோனேஷியா சுனாமியால்

இந்த இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்க மீட்பு பணி நடைபெற்ற அந்த குழந்தை இடிபாடுக்குள் சிக்கி உயிருக்கு போராடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த குழந்தையுடன், இன்னொரு ஆண் நபரும் சிக்கியிருந்ததாகவும், இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]