இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

இயற்கை பேரழிவுகளை சந்தித்து வரும் இந்தோனேஷியாவில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் ஜவா மற்றும் பாலி தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் இன்று

எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 7.5 ஆக பதிவான அந்த பயங்கர நிலநடுக்கத்தால் 170 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது.

இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டது.

இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் இருந்து அந்நாடு மீண்டு வருவதற்குள் அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேஷியாவில் இன்று

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]