இந்தோனேசிய இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500ஐ தாண்டியது

இந்தோனேசிய இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500ஐ தாண்டியது

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1571 ஆக அதிகரித்துள்ள நிலையில், மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள், என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

அத்தோடு, சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

எனவே இடிபாடுகளில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29ஆம் திகதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது.

இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசிய இயற்கை இந்தோனேசிய இயற்கை இந்தோனேசிய இயற்கை இந்தோனேசிய இயற்கை இந்தோனேசிய இயற்கை இந்தோனேசிய இயற்கை இந்தோனேசிய இயற்கை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]