இந்தோனேசிய இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு மைத்திரி இரங்கல்

இந்தோனேசிய இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு மைத்திரி இரங்கல்

இந்தோனேசிய இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோவிற்கு இலங்கை ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள செய்தியிலேயே தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த அனர்த்தத்தை கேள்வியுற்று தாம் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தோனேசிய மக்களுடன் இலங்கையும் கைகோர்த்துள்ள என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டெழுந்து, நாட்டைக் கட்டியெழுப்பும் சக்தி அந்நாட்டு அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் கடந்த 28ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் சிக்கி ஆயிரத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]