இந்தோனேசிய ஆழிபேரலைக்கு இதுதான் காரணம் – வெளியான தகவல்!

இந்தோனேசியாவில் திடீர் என ஏற்பட்ட சுனாமியால் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது சுனாமி ஏற்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

சுனாமியால் 291 பேர் பலியாகி உள்ளனர். 1000 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 800 பேர் காணாமல் போயுள்ளனர்.

இன்னும் அங்கு பல இடங்களில் கடல் நீர் வெளியே செல்லாமல் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கரகட்டாவ் எரிமலையால் இந்த சுனாமி ஏற்பட்டுள்ளது. சைல்ட் எரிமலை என்று இந்த கரகட்டாவ் எரிமலை அழைக்கப்படுகிறது. இது இந்த வருடம் முழுக்க அடிக்கடி வெடித்து வந்தது. சுனாமிக்கு முக்கிய காரணம் இதுதான்.

முன்னதாக, இது வெடித்த காரணத்தால்தான் இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நில நடுக்கம் ஏற்பட்டது  என கூறினார்கள். இதனால் ஏற்பட்ட அழுத்த மாறுபாடு காரணமாக சுனாமி ஏற்பட்டது என்று கூறினார்கள். இந்த எரிமலை வெடித்து சில நிமிடங்களில் சுனாமி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது சுனாமிக்கு உண்மை காரணம் என்ன என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.  இந்த கரகட்டாவ் எரிமலையின் பெரும் பகுதி கடலில் விழுந்த காரணத்தால்தான் சுனாமி ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர்.

கரகட்டாவ் எரிமலையின் ஒரு பகுதி கடலில் விழுந்து உள்ளது. இது யுரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி சென்டினல் என்ற சாட்டிலைட் மூலம் (European Space Agency’s Sentinel-1) கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான ஆதாரங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றுதெரிவித்துள்ளனர்.  இதன் காரணமாகத்தான் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]