இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.

மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது.

சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த அலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன.

பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமியில் சிக்கி இடிந்து விழுந்தன. ஏராளமானோர் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்தபாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை மனித உடல்கள் காணப்படுவதால் உயிரிழப்பு அதிக அளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது.

சுனாமி பாதித்த பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணிகள் தொடங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]