இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டிமோர் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.
பூமிக்குள் 8 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.2 அலகுகளாக பதிவானது.
இன்றைய நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படாத நிலையில், சேத விபரங்கள் தொடர்பாகவும் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
நிலநடுக்கம் மற்றும் பூகம்பங்களை அடிக்கடி சந்தித்துவரும் பூமியின் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள தீவுநாடான இந்தோனேசியாவில் ஆண்டுதோறும் பலநூறு நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியுடன் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இந்தோனேசியாவில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். சமீபத்தில் இங்குள்ள லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 555 பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com