இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் – 5.9 ரிக்டர் அளவு

இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்ந நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளியன்று 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது.

இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, தேவாலயம் ஒன்றின் இடிபாடுகளில் சிக்கியிருந்த மாணவர்கள் 36 பேரின் சடலங்களை மீட்புக்குழுவினர் இன்று மீட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனும் தீவில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 வெளியிட்டுள்ளது.

சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் சும்பா தீவில் வசித்து வரும் நிலையில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]