இந்து மதத்தை இழிவாக பேசிய குற்றச்சாட்டில் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு

இந்து மதம் சார்ந்த விடங்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறி நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரண் என்பவர், பெங்களூரு 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்த வழக்கறிஞர் கிரண் தெரிவித்துள்ளதாவது, நடிகர் பிரகாஷ் ராஜ் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்துகொண்டு பேசும்போது, இந்து மதத்தையும் இந்துகடவுள்கள் மற்றும் வழிபாடுகளையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.

இந்துக்கள், கடவுள்களாக போற்றி வணங்கும் பசுவையும் விமர்சனம் செய்து வருகிறார். அவரது பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தி வருகிறது. தொடர்ந்து இதுபோன்று பேசிவரும் பிரகாஷ்ராஜ் மீது சட்டப்படி நவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் பிரகாஷ்ராஜ் மீதான மனு விசாரணையை நவம்பர் 25ஆம் திகதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]