இந்து சமய பாடத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நிபுணத்துவக்குழுவை அமைக்க முடிவு

இந்து சமயப் பாடத்திட்டத்தில் காணப்படுகின்ற அல்லது சுட்டிக்காட்டப்படுகின்ற விடயங்களை ஆராய்ந்து அவற்றை மாணவர்கள் விரும்பிக் கற்கும் விதத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான ஒரு இந்து சமய பாட நிபுணத்துவக்குழு உருவாக்கப்பட உள்ளது.

இந் குழுவில்,
1. கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
2. தேசிய கல்வி நிறுவகம்ச பரிட்சைத் திணைக்கள பாட விடயங்களுக்கு பொறுப்பான மேலதிகாரிகள்
3. பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைசார் நிபுணர்கள்
4. மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்
5. இந்து சமய பாட ஆசிரிய ஆலோசகர்கள்

ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் அரசாங்கம் இந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் தொடர்பாகவும் உரிய முறையில் கவனம் செலுத்தாமை காரணமாக பாடத்திட்டத்தில் நிலவுகின்ற பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இந்து சமயத்தை கற்பதில் மாணவர்கள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்கும் முகமாக அதற்கென ஒரு புதிய குழு ஒன்றை அமைத்து குறைகள் இனங்கண்டுக் கொண்டுதற்கு அமைய மேற்படி இந்து சமய பாட நிபுணத்துவக்குழு உருவாக்கப்படுகின்றது. இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (18.04.2017) கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் கல்வி அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவாநந்தா, கல்வி அமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின் மதிவாணன், தேசிய கல்வி நிறுவகத்தின் இந்து சமய பாடத்திற்கு பொருப்பான விரிவுரையாளர் பொன் ஜெயரூன், பேராசிரியர்களான சி.பத்மநாதன், ஏ.என்.கிருஸ்ணவேனி, டாக்டர்.க.இரகுவரன் உட்பட ஒய்வுபெற்ற ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து வெளியட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன்,

இந்து சமய பாடத்திட்டத்தில் ஆண்டு ஒன்று முதல் ஆண்டு 11 வரை பாடத்திட்டத்தில் மாணவர்களின் தகுதிக்கு அப்பாற்பட்ட பல விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக இது தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற பலர் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் டக்ளஸ் தேவாநந்தாவும் கருத்து தெரிவித்துள்ளார். எனவே, இதற்கான ஒரு முறையான ஏற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதன்போது பல்வேறு கருத்து பரிமாறல்கள் இடம்பெற்றன.

இந்து சமய பாடத்திட்டத்தில் மாணவர்களின் தகுத்திக்கு அப்பாற்றபட்ட பல விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளமையால் இந்து சமயத்தை கற்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலைமை தொடருமானால் மாணவர்கள் எதிர்காலத்தில் இந்து சமயம் தொடர்பான கற்கைக்கு முக்கியத்துவம் வழங்கமாட்டார்கள். அவர்களுக்கு இந்தப் பாடத்திட்டம் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிடும.

எனவே, அதற்கு இடமளிக்க முடியாது. இந்து சமய பாடத்தை மாணவர்கள் விரும்பி கற்கும் வகையில் அமைப்பதற்கான ஒரு கல்வி அமைச்சும் கல்வி வெளியீட்டுத் திணைக்களமும் தேசிய கல்வி நிறுவகம்ச பரிட்சைத் திணைக்கள பாட விடயங்களுக்கு பொறுப்பான மேலதிகாரிகள், பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைசார் நிபுணர்கள், மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், இந்து சமய பாட ஆசிரிய ஆலோசகர்கள் அடங்கிய நிபுணத்துவக்கு குழு ஒன்று அமைத்து இந்து சமய பாட புத்தகத்தில் காணப்டும் குறைகள் நிவர்த்தி செய்யபடுவதோடு ஏதிர்காலத்தில் இந்த நிபுணத்துவக்குவின் சிமார்சுக்கு அமையவே பாடதிட்டம் பாட புத்தக வெளியீடு அனைத்தும் நடைபெரும் என்று கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]