இந்துமதவிவகார பிரதியமைச்சராக முஸ்லிம் நியமிக்கப்பட்டதற்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

இந்துமதவிவகார பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்துமக்களின் ஒற்றுமை என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்துமத அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த பிரதியமைச்சர் நியமனத்திற்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுப்பபப்ட்டதுடன் உடனடியாக இந்துமதவிவகாரத்திற்காக இந்து மதத்தினை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி நல்லிணக்கத்தினை காட்டவிரும்பினால் பௌத்த விவகாரத்திற்கான அமைச்சினை வேறு ஒரு மதத்திற்கு வழங்கி பார்க்கவேண்டும்.இரண்டு மதங்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]