ராஜீவ்காந்தி இறந்திருக்காவிட்டால் இலங்கையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும்

ராஜீவ்காந்தி இறந்திருக்காவிட்டால் இலங்கையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும்.

இனப்பிரச்சனைக்கு தீர்வு

ஒருமித்த நாட்டுக்குள் எமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வினைப் பெறுவதற்கு தயாரக் இருக்கினறோம் என்பதை நாங்கள நிரூபித்திருக்கின்றோம் அதற்கு பின்னால் எமது மக்கள் நிற்கின்றார்கள் என்பதை வருகின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் மூலமாக நாங்கள் ஊர்ஜிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்திரய பிரதமர் ரஜீவ்காந்தி இறந்திருக்காவிட்டால் அவருடைய காலத்தில் இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தொழிவுட்டல் கருத்தரங்கு சனிக்கிழமை (25) மாலை மட்டக்களப்பு பேடினன்ட் மண்டபத்திலர் நடைபெற்றது இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற தொழிவுட்டல் கருத்தரங்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், க.துரைரெட்னசிங்கம், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் நிலலைப்பாட்டினைப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மிகவும் பக்குவமாக நிதானமாக சிங்கள மக்கள் மத்தியில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமளிக்காமல் பிரிபடாத நாட்டிற்குள் நாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் சுயாட்சியை கேட்டுள்ளோம்.

முதலில் எங்கள் மது எங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் பேசுபவர்கள் மீதும் நாங்கள் ஒது அளவிற்கு நம்பிக்கை வைக்க வேண்டும் எம்மைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு எமக்குத் தேவை. இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமருக்கும் புதிய அரசியலமைப்பு தேவை.

இந்த நாட்டின் கடன் சுமையை அவர்களால் தாங்க முடியாது. நாட்டின்’ வருமானத்தில் 70 வீதமான வருமானம் கடன் சுமையைக் குறைப்பதற்காக செலவு செய்யப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் முன்னேற வேண்டும் வெளிநாட்டு முதலடுகள் வரவேண்டுமாகவிருத்தால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு சமுத்துவத்தின் அடிப்படையில் நிரந்திர சமாதானம் ஏற்பட வேண்டும்.

ஓற்றை ஆட்சி என்ற சொல் இருக்காது பிரிபடாத ஒருமித்த நாடு என்ற பதம் இருக்கும் அதில் எந்த பிரச்சினையும் இல்லை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் தேசிய பட்டியல், மாகாண பட்டிய்ல் உள்ளுராட்சி என இருக்கும் அந்த அந்த மட்டத்தில் அதிகாரங்கள் தொடர்பாக தங்களின் இறைமையின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுப்பார்கள்.

தமது இறைமையின் அடிப்படையில் அந்த அந்த மட்டங்களில் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தக் கூடியவர்களை மக்கள் தெரிவுசெய்து தங்களுடைய இறைமையின் அடிப்படையில் மக்கள் சார்பாக தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் பயன்படுத்துவார்கள்.

மாகாணசபைகளுக்கு வழங்குகின்ற அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட முடியாது. மீளப்பெற முடியாது. அவ்வாறு பெறவேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமல்ல செனட் சபையிலும்; பெரும்பான்மை பெறவேண்டும். ஒரு மாகாணசபையில் ஏதமாது மாற்றம் கொண்டுவர வேண்டுமானால் அதற்கு செனட் சபை உறுப்பினர்கள் ஐவரில் மூவர் ஆதரவு தரவேண்டும்.

வடகிழக்கு இணைக்கப்பட்ட போதிலும் கூட இது நிரந்தரமாக இறுதியாக இணைக்கப்படவில்லை தற்காலிக இணைப்பாகவே அது கருதப்பட்டது. ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என அங்கு கூறப்பட்டிருந்தது. துர்ரதிஷ்டவசமாக ரஜீவ் காந்தி இறந்தார் அவர் இறந்திருக்காவிட்டால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை நாங்கள் இழந்தோம் ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வடகிழக்கு பிரிக்கப்பட்டுள்ளது.

சரித்திர ரீதயாக தமிழ் பேசும் மக்கள் வடகிழக்கில் வாழ்ந்து வந்தமார்கள் என்ற ரீதியில் வடகிழக்கு இணைக்கப்பட்டது. இந்த விடயத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஒரு இணக்கப்பாடு வரவேண்டியது அவசியம்.

வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு மாகாணம் என அதிகாரங்கள் தொடர்பாக அஷ்ரப் காலத்தில் அவருடன் பேசி நாங்கள் சில ஒழுங்குகளைச் செய்திருந்தோம். இரண்டு சமூகங்களும் தங்களுடைய எதிர்கால நலனைக் கருதி விட்டுக்கொடுப்புடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இது தொடர்பாக நாங்கள் பேசியிருக்கின்றோம். அந்த பேச்சுகள் இன்னும் ஆழமாக நடைபெற்று முடிவுக்கு வரவேண்டும்.

பேச்சுவார்த்தையின் போது அடிப்படை விடயங்களை நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது. மற்றவர்களும் விட்டுத்தரவேண்டும் நாங்களும் விட்டுக்கொடுக்க வேண்டும். அதை மனதில் வைத்து செயற்பட வேண்டும். கிழக்கில் வாழுகின்ற எமது மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் விட்டுகொடுப்புக்களைச் செய்ய வேண்டும்.

யாழ் மாவட்டத்தை தவிர்ந்து கூடுதலாக தமிழ் மக்கள் வாழுகின்ற மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளது இது நமக்கு மிகவம் தேவையான மாவட்டம். இன்றைய சூழலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.

1956ம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் ஒருமித்து நின்ற காரணத்தினால்தானட நாங்கள் தற்போது இந்த அந்தஸ்தை அடிந்துள்ளோம். மாகாணசபைகள் உருவாக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

தற்போதுள்ள வாய்ப்பினை நாங்கள் இழக்க கூடாது. மீண்டும் ஒரு முறை இரண்டு பெரும்பான்மை கட்சிகள் இணைந்த இவ்வாறான சந்தர்ப்பம் வரும் என நாங்கள் எதிர்பார்க முடியாது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது மாத்திரமல்லை ஒரு சர்வஜன வாக்கெடுப்பில் மக்களுடைய அங்கீகாரத்தை நாங்கள் பெற வேண்டும்.

விரைவில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எமது தேர்தல் முடிவுகளினை நாம் ஒருவமித்து ஒற்றுமையாக நிற்கின்றோம் என’பதை இந்த நாட்டிலுள்ள ஆட்சியாளர்களுக்கும் சர்வதேசத்துக்கும் நாங்கள் கூறக்கூடிய ஒரு நிலமை இருக்க வேண்டும்.

ஒருமித்த நாட்டுக்குள் எமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வினைப் பெறுவதற்கு தயாரக் இருக்கினறோம் என்பதை நாங்கள நிரூபித்திருக்கின்றோம் அதற்கு பின்னால் எமது மக்கள் நிற்கின்றார்கள் என்பதை வருகின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் மூலமாக நாங்கள் ஊர்ஜிப்படுத்த வேண்டும்.

தீவிரமாதகச் செயற்பட்டவர்கள் தீவிரமான கருத்துக்களைக் கூறியவர்கள் இயக்கங்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றான் கட்சியுடைய புதுப்புது அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களை அடையாளம் கண்டு மக்கள் ஒதுக்க வேண்டும். நாங்கள் ஒரு கௌரவமான தீர்வு ஒன்றைப் பெறுக்கூடிய வாசலில் நிற்கின்ற பொழுது இவ்வாறான அமைப்பாளர்களுக்கு எமது அரசியலில் இடமில்லை என எமது மக்கள் நிருபிக்க வேண்டும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]