முகப்பு News India இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை அமைச்சர் லகஷ்மன் கிரியெல்ல சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை அமைச்சர் லகஷ்மன் கிரியெல்ல சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை அமைச்சர் லகஷ்மன் கிரியெல்ல சந்தித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயின் இறுதிக் கிரியையில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில் அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை நேற்று சந்தித்துள்ளார்.

இந்திய வெளியுறவத்துறை அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தமது டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, இலங்கையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பங்களிப்பை இரு நாடுகளினதும் அமைச்சர்களும் நினைவுகூர்ந்தாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த சந்திப்பு குறித்த மேலதிக தகவல் எதனையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் வெளியிடவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com