இந்திய வீரருக்கு பந்து வீச அதிரடி தடைவிதித்த ஐ சி சி

இந்திய க்ரிக்கட்  அணி நியூசிலாந்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நியூசிலாந்துக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி,நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் இந்த தொடரை 3-0 என இந்திய அணி வென்றுள்ளது.

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், சரியாக 5 பந்தவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. இதன்போது ரயுடு பந்து வீசியது  சர்ச்சைக்கு உள்ளானது.

ஐ சி சி விதிக்கு மாறாக அவர் பந்து வீசியதாக சர்ச்சை எழுந்தது.  ரயுடுவின் பந்துவீச்சை சோதனைக்கு உட்படுத்தும் வரை பந்துவீச ஐசிசி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நியூசிலாந்து தொடரில் விளையாண்டு வரும்  ராயுடு, சர்வதேச கிரிக்கட்டில் தொடர்ந்து பந்துவீச வேண்டும் என்றால், தனது பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்திஇ ஐ சி சி விதிப்படி முறையாக பந்து வீசுவதை உறுதி செய்தாக வேண்டும். அதுவரை  ரயுடு பந்துவீச முடியாது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]