இந்திய விமானப்படை தளபதி – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நான்கு நாட்கள் பயணமாக கடந்த 10ஆம் நாள் இலங்கைக்கு வந்த இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ, நேற்று முன்தினம் பிரதமர், மற்றும் பாதுகாப்பு உயர் மட்டத்தினருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பில் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.