முகப்பு News India இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட்டது

இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட்டது

இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி  இன்று கரைக்கப்பட்டது

உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது.

பன்னா லால் பல்லா நகராட்சி கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த யாத்திரை பிரேம் ஆசிரமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் புனித நதியான கங்கையின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் பகுதிக்கு சென்று சேர்ந்தது.

புரோகிதர்கள் மந்திரம் ஓத, ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளும், அவரது சிதைக்கு தீமூட்டியவருமான நமிதா கலசத்தில் இருந்த வாஜ்பாயின் அஸ்தியை ஹரித்துவார் கங்கை நீரில் கரைத்தனர்.

இந்த சடங்கில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், வாஜ்பாயின் பேத்தி நிஹாரிக்கா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com