இந்திய பட்ஜெட்டில் இலங்கைக்கு இருமடங்கு நிதி

இந்திய பட்ஜெட்

இலங்கைக்கு 150 கோடி ரூபாயை இந்திய மத்திய அரசாங்கம் தனது 2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கடைசி வரவு – செலவுத் திட்டத்தை நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்தார்.

இந்த வரவு – செலவுத் திட்ட உரையின் போது இலங்கைக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அவர் கூறினார்.

இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த ஆண்டு 75 கோடி ரூபாயாக இருந்ததுடன் அது இம்முறை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]