இந்திய தமிழ்நாட்டு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் யாழிற்கு விஜயம்

யாழ்ப்பாணம்; இந்திய தமிழ்நாட்டு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று (18) யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்திய தமிழ் நாட்டுஅரசாங்கத்தினால் யாழ்.பொதுநூலகத்திற்கு வழங்கப்படவுள்ள 50 ஆயிரம் புத்தகங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர், கல்வி அமைச்சர், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுநர் ஆகியோர் இணைந்து, ஏற்பாடு செய்துள்ளனர்.

யாழ்.பொதுநூலகத்திற்கு நேற்றுக்காலை 10.00 மணியளவில் வருகைதந்த இந்திய கல்வித்துறை அமைச்சர், கே.ஏ.செங்கோட்டையன் பாடசாலை மாணவர்களின் பாண்ட் இசை வாத்தியங்கள் முழங்க, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விவசாய கமநல பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரினால் வரவேற்கப்பட்டார்.

பாடசாலை மாணவர்களினால், மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், பாண்ட் இசை முழங்க யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அங்கு இந்திய இலங்கை மற்றும் மாகாண சபை கொடிகள் ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, பொதுநூலக விருந்தினர் ஏட்டில் கையொப்பமிட்டார். அதன் பின்னர், பொதுநூலக கேட்போர் கூடத்தில் புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வுகள் ஆரம்பமானது.

பாடசாலைகளுக்கான நூல் கொள்வனவிற்குரிய காசோலைகளை பாடசாலைகளின் அதிபர்களிடம் யாழ். இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ. சேனாதிராஜா மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன், கல்வி இராஜாங்க அமைச்சர் பொன், இராதாகிருஸ்ணன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் பொன், இராதாகிருஸ்ணன், வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட தர்மலிங்கம் சித்தார்த்தன், மறவன்புலோ சச்சிதானந்தம், யாழ்.மாநகர ஆணையாளர் பொ.ஜெயசீலன், மற்றும் யாழ்.பொதுநூலக பிரதம நூலகர் சுகந்தி சதாசிவமூர்த்தி மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]