இந்திய கிரிக்கெட் அணி இலங்கையணியை மூன்று தொடரிலும் வைட் வாஷ் செய்துள்ளது

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையணியை மூன்று தொடரிலும் வைட் வாஷ் செய்துள்ளது.

இலங்கை – இந்தியா இடையிலான இருபதுக்கு இருபது தொடரையும் இழந்தது இலங்கை. ஏற்கனவே இலங்கையணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த நிலையில் தற்போது இருபதுக்கு இருபது தொடரிலும் கோட்டை விட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணியில் முனவீர 53 ஓட்டங்களையும், பிரியஞ்சன் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் சலால் 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

171 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணியில், அணித்தலைவர் விராட் கோஹ்லி 82 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார், மனிஷ் பாண்டே 51 ஓட்டங்களை கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

19.2 ஒவரில் வெற்றி இலக்கை இந்திய அணியினர் அடைந்தனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]