இந்திய அளவில் ட்விட்டரில் டிரென்ட் ஆன #GOBACKMODI என்ற ஹேஷ் டாக்!

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஹேஷ் டாக்கை ட்ரெண்டாக்கினர்.

இதேபோல் காவிரி வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெருக்கள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புகொடி ஏற்றப்பட்டது. பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரித்து விருதுநகர், சிவகாசி பகுதிகளில் உள்ள திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சென்னையில் கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்க உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, திருவெறும்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், நாகை, திருவாரூரில் உள்ள வீடுகள், பேருந்து நிலையம், அலுவலகங்களில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி திருவெறும்பூர் பர்மா காலனியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி வருகையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் ட்ரென்ட் ஆனது கோ பேக் மோடி (#GoBackModi).பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஹேஷ் டாக்கை ட்ரெண்டாக்கினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]