இந்திய அணியை பந்தாடியது இலங்கை

இலங்கை

இந்திய அணியை பந்தாடியது இலங்கை

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் சண்டிமல் களத்தடுப்பினைத் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமாலும், ரெய்னா 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

தவான் 49 பந்தில் தலா 6 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 20 ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களைக் குவித்தது.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலகா, குஷால் மெண்டிஸ் ஆகியோர் இறங்கினர்.

பெராரா தனது அதிரடியை தொடர்ந்த குஷால் பெரேரா 37 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 4 ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி 2 ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் முதல் பந்து வைடு ஆனது. அடுத்த பந்தில் ஒரு ரன்னும், அதற்கடுத்த பந்தில் 2 ரன்னும், மூன்றாவது பந்தில் 4 ரன்னும் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக குசால் பெராரா தேர்வு செய்யப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]