இந்தியா மற்றும் ஜப்பானுக்கு ஜனாதிபதி விஜயம்

அனைத்துலக சூரிய கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியா, மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஆரம்பிக்கவுள்ளார்.

இன்று மற்றும் நாளை புதுடெல்லியில் உத்தியோகப்பூர்வமாக தங்கியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால, இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்தையில் ஈடுபடக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விஜயத்தை அடுத்து, ஜப்பானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பிக்கவுள்ளார்.

ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபேயின் அழைப்பின் பேரில், எதிர்வரும் 12ஆம் திகதி தொடக்கம், 17ஆம் திகதி வரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானுக்கான விஜயத்தை முன்னெடுக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின்போத, ஜப்பானிய ஜனாதிபதி அகிஹிடோவை 13ஆம் திகதியும், ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபேயையும் 14ஆம் திகதியும் சந்தித்துப் பேசவுள்ளதுடன், இராப்போசன விருந்தில் கலந்துகொள்வார் என தெரிவிககப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]