இந்தியா – பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டும் சுமதிபால மோடியிடம் வலியுறுத்து

இந்தியா – பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடியிடம் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபல திலங்க சுமதிபால வலியுத்தியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத ஊடுருவல் நடைபெற்று வருவதாலும், பாகிஸ்தான் இராணுவம் அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதாலும் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேரடி கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருக்கிறது.

இருநாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையில் 6 தொடர்கள் நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இருந்தாலும் இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானுடன் விளையாட மறுத்து வருகிறது.

சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான், ‘நாங்கள் இந்தியா சென்று விளையாட தயாராக இருக்கிறோம். இந்தியாதான் விளையாட மறுத்து வருகிறது’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மோடியின் இலங்கை வியாயத்தின்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற பரிசீலனை செய்யுங்கள் என்று இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால, மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் சங்கத் தலைவர் திலங்க சுமதிபலா கூறியுள்ளதாவது,

இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் மோடியை சந்தித்தேன். அப்போது பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் விளையாடுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்ற செய்தியை அவரிடம் தெரிவித்தேன்.

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் நடைபெறாவிடில், பாகிஸ்தானுக்கு மட்டும் பாதிப்பில்லை. பாகிஸ்தான் இந்தியா சென்று விளையாடாவிட்டால், இந்தியாவிற்கு பாதிப்பு. பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக விளையாடாவிட்டால், பாகிஸ்தானுக்கு பாதிப்பு.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடரை துபாய் அல்லது இலங்கையில் நடத்தலாம் என்று வேண்டுகோள் வைத்தேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]