இந்தியா செல்கிறார் பிரதமர் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் ஹைதராபாத் நகரில், எதிர்வரும், 19ஆம் திகதி தொடக்கம், 21 ஆம் திகதி வரை, உலக தகவல் தொழில்நுட்ப காங்கிரசின் 22 ஆவது மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பார் என்று இந்தியாவின் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். எனினும், இந்தியப் பிரதமர் செயலகம் இன்னமும், அவர் பங்கேற்பதை உறுதிப்படுத்தவில்லை.

உலக தகவல் தொழில்நுட்ப காங்கிரசின் மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் 30இற்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]