இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான 3-வது டெஸ்ட்டை கைப்பற்றியது இந்தியா

இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது.

இதில் 521 ஓட்டங்களை இங்கிலாந்து வெற்றிக்கு இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. பும்ராவின் அபார பந்து வீச்சால் நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றுக்கொண்டது. அடில் ரஷித் 30 ஓட்டங்களுடனும், ஆண்டர்சன் 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 96.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்த நிலையில், கடைசி விக்கெட்டுக்கு ரஷித்- ஆண்டர்சன் ஜோடி 8.3 ஓவர்களில் விளையாடியதால், நேற்று இந்திய அணி வெற்றி பெற முடியாது போனது.

இந்நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இன்றைய ஆட்டத்தின் 3-வது ஓவரை அஸ்வின் வீசினார். 5-வது பந்தில் ஆண்டர்சன் ரகானேவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 317 ஓட்டங்கள் சேர்த்து சகல விக்கெட்டுகளையும் இழந்து நிலையில், 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. பும்ரா 7 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா 6 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளதோடு, 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் எதிர்வருகிற 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]