இந்தியாவையே நடுங்க செய்த சம்பவத்தின் திரைப்படத்தில் த்ரிஷா!

இந்தியாவையே நடுங்க செய்த சம்பவத்தின் திரைப்படத்தில் த்ரிஷா!

இந்தியாவை நடுநடுங்க செய்த சம்பவங்களில் ஒன்று மும்பை தாக்குதல். கடந்த 2008ஆம் அண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஓட்டலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஏற்கனவே பொலிவுட்டில்  ‘தி அட்டாக் ஆப் 26/11’ என்ற திரைப்படத்தை ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார். இந்நிலையில் இதே சம்பவம் தமிழிலும் தற்போது படமாக உள்ளது.

‘1818’ என்ற டைட்டிலில் படமாக இந்த படத்தை ரிதுன்சாகர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் த்ரிஷா முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் ராஜேந்திர பிரசாத், பிரம்மானந்தம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ‘ஆரம்பம்’ புகழ் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் பாடல்களை கார்க்கி எழுதுகிறார்.

த்ரிஷா ஏற்கனவே ‘மோகினி’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘கர்ஜனை’, ’96’ ஆகிய தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது ‘1818’ படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளதால் இந்த 2017ஆம் வருடம் த்ரிஷாவின் வருடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.