இந்தியாவையும், சீனாவையும் திருப்திப்படுத்தும் இலங்கை : அபிவிருத்திக்கான மூலோபாயங்கள் குறித்து தீவிர கலந்துரையாடல்

இந்தியாவையும், சீனாவையும் திருப்திப்படுத்தும் இலங்கையில் மூலதனமிட சந்தையை சுதந்திரமாக திறந்துவிடுவது தொடர்பில் நல்லாட்சி அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக அரசதரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின்னர் இலங்கையில் பொருளாதார ரீதியில் பாரிய மறுசீரமைப்புகளை மேற்கொண்டால் மாத்திரமே பொருளாதார அவிருத்தியை நோக்கி நகர முடியும் என்று முன்னாள் அரசுக்கு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், சர்வதேச நாடுகளும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருந்தன.

ஆனால், கடந்த அரசு சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளுடன் மாத்திரமே வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடித்ததாலும், யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்க முற்சியை மேற்கொள்ள தவறியதாலும் சர்வதேச பொருளாதார தடைகளை சந்திக்க நேரிட்டது.

ஆட்சிமாற்றத்தின் பின்னர் நல்லாட்சி அரசு பொருளாதாரக் கொள்கைகளிலும், வெளிவிவகாரக் கொள்கைகளிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியதன் காரணமாக இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் விதிக்கப்படவிருந்த பொருளாதார தடையில் இருந்து தப்பித்துக்கொண்டமை மாத்திரமின்றின் நல்லிணக்க முயற்சிகளால் சர்வதேச உறவுகளையும் இருக்கமாக வலுப்படுத்திக்கொண்டது.

நல்லாட்சி அரசு இலங்கையின் நீண்டகால நட்பு நாடு மற்றும் பக்கது நாடு என்ற அடிப்படையில் இந்தியாவுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்திக்கொண்டது. இலங்கையில் இந்தியாவுக்கான முதலீட்டு வாய்ப்பை திறந்துவிடும் நோக்கில் எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திட நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிரணி எட்கா உடன்படிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவதால் இந்நடவடிக்கை தொடர்ந்து இழுபறியில் உள்ளது.

திருக்கோணமலையில் உள்ள 100 எண்ணை கிடங்குகளை இந்தியாவுக்கு வழங்க அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிரணி கடுமையான எதிர்ப்பை வெளிட்டு வருகிறது. இலங்கையின் விவசாய உற்பத்திகளும், பெருந்தோட்டப் பயிர்கள் உற்பத்திகளும் கடுமைனான வீழ்ச்சியை நோக்கி நகர்வதால் கைத்தொழில் துறையை பாரிய அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்ல அரசு தீவிர முயற்சியெடுத்து வருகிறது.

அதன் காரணமாகவே அம்பாந்தோட்டையை மையப்படுத்திய பொருளாதார வலயத்தை உருவாக்க சீனாவுடன் உடின்படிக்கையென்றை அரசு மேற்கொள்கிறது. கடந்த சனிக்கிழமை இந்த அறிக்கை கைச்சாத்திடபட்டது.

சீனாவின் பட்டுபாதை திட்டத்தின் மையப்புள்ளியாக அப்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது. இதன்மூலம் இலங்கை பாரிய பொருளாதார நலன்களை பெறலாம் என்ற அடிப்படையிலேயே சீனாவுக்கான வாய்ப்புகளை இலங்கை திறந்துவிடுகிறது.

அப்பாந்தோட்டைதுறைமுக ஒப்பந்தம் சீனாவுடன் கைச்சாத்திடப்படுவதால் அத்துறைமுகத்தை அமைப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட முற்றுமுழுதான் கடன்தொகையில் இருந்து இலங்கை விடுப்படவுள்ளது. தற்போதைய சூழலில் வருடதாந்தம் 48ஆயிரம் மில்லியன் ரூபாவை அரசு அப்பாந்தோட்டை துறைமுகத்திற்கான கடனாகச் செலுத்தி வருகிறது. 2020ஆம் ஆண்டாகும் போது இந்தக் கடன் 1.2டிரில்லியனமாக மாறும் என்று அரசு அறிவித்துள்ளது.

அண்டைய நாடான இந்தியாவும், பட்டுபாதை திட்டத்தை விரிவாக்க முயற்சிகளை மேற்கொண்டுவரும் சீனாவுக்கும் இலங்கையில் முதலீடு செய்வது பாரிய பொருளாதார நலனை பெற்றுக்கொடுக்கும். இவ்விரு நாடுகளின் முதலீடுகளின் மூலம் இலங்கையின் பொருளாதாரம் பாரிய அபிவிருத்தியை நோக்கி நகரும் என்ற அடிப்படையில் நல்லாட்சி அரசு இந்நாடுகளுக்கு இலங்கையின் சந்தையை திறந்துவிட தீவிர கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருகிறது. அதன் முக்கிய கட்டமே அப்பாந்தோட்டை ஒப்பந்தம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]