இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்

மத்தல விமான நிலையம் தொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமென்றால் விமான சேவை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாவிட்டால் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாது. என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மத்தல விமான நிலையத்தை பொறுப்பேற்கும்போது நட்டமடைந்த நிலையிலேயே காணப்பட்டதாகவும், அதனை பொருளாதார ரீதியாக இலாபம் அடையும் ஒன்றாக மாற்ற திட்டமிட்டதாகவம் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இதனை அபிவிருத்தி செய்வதற்கான யோசனைகளை முன்வைக்குமாறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களிடம் கோரிக்கை முன்வைத்திருந்ததாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மத்தல விமான நிலையத்தை கூட்டு பங்காண்மையின் கீழ் கட்டியெழுப்ப இந்திய விமான அதிகார சபை முன்வந்தது.

எனவே மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கி கடன் சுமையை குறைக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கும் போது தேசிய பாதுகாப்பு மற்றும் ஊழியர் உரிமைகளிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]