இந்தியாவுக்கு பயணமானார் மஹிந்த

மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெங்களூர் நோக்கி இன்று அதிகாலை விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 173 ரக விமானத்தில் இன்று அதிகாலை 4.50 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி பெங்களூர் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியுடன் 6 பேர் கொண்ட குழுவினர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பெங்களூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி இன்று இரவு மீண்டும் இலங்கையை வந்தடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இந்தியா வரும் மஹிந்தவுக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]