இந்தியாவில் விற்பனையாகும் பால் மற்றும் பாலால் செய்யப்படும் பொருட்கள் தரமானதல்ல

இந்தியாவில் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பாலால் செய்யப்படும் பொருட்கள் தரமானதல்ல என்று விலங்குகள் நல வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினரான மோகன் சிங் அலுவாலியா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள தரத்தின்படி நமது நாட்டில் பால் அல்லது பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை.

அன்றாடம் நாடு முழுவதும் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படமே காணப்படுகிறது. பாலில் சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை நிற பெயிண்ட், ரீபைண்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்கின்றனர்.

பால் அடர்த்தியாக இருக்கவும், நீண்ட நாள் பயன்பாட்டுக்காகவும் அதில் திட்டமிட்டே யூரியா, ஸ்டார்ச், பார்மலின் போன்றவற்றையும் கலக்கின்றனர். இதுபோன்ற கலப்படம் உடல் உறுப்புகளுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும்.

பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால் இந்தியாவில் 2025ஆம் ஆண்டில் 87 சதவீத மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட மோசமான பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை எச்சரித்து உள்ளது.’என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விற்பனையாகும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]